Chennai - Marriage Held on 30th Oct, 2017

Chennai - Marriage Held on 30th Oct, 2017

Image

கல்யாணமாலை மோகன், திருமதி மீரா நாகராஜன் அவர்களுக்கு வணக்கங்கள் ,

அருமை மகளின் திருமணம் நடத்தி வைச்சாச்சு முகூர்த்தம் அக்டோபர் முப்பது!

என்னென்ன செய்யணும், சீர் என்ன வைக்கணும், பந்ததி என்ன, சாஸ்திரம் என்ன, வழக்கம் என்ன? புரியாமல் ஒரு மலைப்பு! அபய ஹஸ்தம் காட்டி, குடும்பத்தின் மூத்த பெண்மணி போல், அதிதி சேவா எடுத்துண்டா பொறுப்பு!

முதல் நாள் நடந்தது விரதம், முன்னேற்பாடுகள் பிரமாதம்!

கூடவே நிச்சயதார்த்தம், குறையின்றி எல்லாம் கனகச்சிதம்!

மாலை வரவேற்பு - வித விதமாய், வகை வகையாய் விருந்துபசாரம் அபாரம்!

மறுநாள் ஊஞ்சல் - பாட்டுக்கச்சேரி என்ன! பச்சைப்பிடி பாத்திரமென்ன! பூப்பந்தல் என்ன! பிரமாதப்படுத்தியிருந்தார் மோகன்!

மகள் சூடினாள் கல்யாண மாலை! சீரும் சிறப்புமாய் நடந்தது கல்யாணம்!

சீர் பட்சணத்தோடு பருப்புத்தேங்காய், அழகழகா அலங்கரிச்சு அம்சமா வைச்சிருந்தா! பட்டுப் பாய், பலகா, காசி யாத்திரை வகையறா, பார்த்துப் பார்த்து, சீராகச் செய்திருந்தார் மீரா!

ஹேமா, பாமா கூட்டணியில், அட்சதை, குங்குமத்தோடு அங்குமணி சாமான்களும் அணிவகுத்து வந்தன நேரப்படி எல்லாம்!

டிபன், சாப்பாடு,காபி என வேளா வேளைக்கு வர, வந்திருந்தவா எல்லாம் ஒரே குரலில் சொன்னா 'கல்யாணம் படு ஜோர்' .

விருந்தினர் மனதுக்கு வழியும் ருசியான சாப்பாடுதான்னு அறிஞ்சவா அதிதி சேவா!

'கல்யாணம் பண்ணிப் பார்'- பழமொழி 'கல்யாணம் பண்ணு, பார் புகழ அதிதி சேவாவுடன்' - இது அனுபவ மொழி!

நன்றியுடன், ராதா, ரமேஷ்.

Nivedita & Abhinav

  • Image

Sripradha &Karthik

  • Image

Krishna &Olivia

  • Image

Save

Save

Save

Celebrity Wedding

  • Image

    Read More